"டி.ஜி.பி -க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு... இது தான் காரணமா..?

Update: 2023-06-29 10:49 GMT

சம்பள பாக்கியை வழங்கக்கோரிய காவல் ஆய்வாளரின் விண்ணப்பத்தை பரிசீலிக்காத டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிய ரஞ்சித் என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு, இரு மாதங்களுக்கு தனக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என டி.ஜி.பி.க்கு மனு அனுப்பினார். இந்த மனு பரிசீலிக்கப்படாததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020ம் ஆண்டு அவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், சம்பள பாக்கி வழங்கப்படாததால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவியின் மருத்துவம் மற்றும் இரு குழந்தைகளின் படிப்பு செலவுகளை மேற்கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இந்த வழக்கு, நீதிபதி பட்டு தேவானந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள மனுதாரரின் சம்பள பாக்கியை வழங்காததும், விண்ணப்பத்தை பரிசீலிக்காமலும் இருந்த டி.ஜி.பி.யின் செயல், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கூறிய நீதிபதி, ஒரு வாரத்தில் மனுதாரரின் விண்ணப்பத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

"டி.ஜி.பி -க்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு... இது தான் காரணமா..? | DGP | HIGH COURT

Tags:    

மேலும் செய்திகள்