ஆடம்பர வீடு, பல கோடி சொத்து குவிப்பு... கோடீஸ்வரர்களாக வலம் வரும் யூடியூபர்கள் - ஸ்கெட்ச் போட்டு தூக்கும் IT

Update: 2023-06-24 06:22 GMT

கேரளாவில் யூடியூபர்களின் வீடுகளில் நடைபெற்ற ஐடி ரெய்டு தேசிய அளவில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில், யூடியூபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐடி ரெய்டு குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

"நம்ம சேனலை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க , ஷேர் பண்ணுங்க, சப்ஸ்கிரைப் பண்ணுங்க அப்படியே அந்த பெல் பட்டனை கிளிக் பண்ணுங்க"

- இதுதான் இன்றைய டிஜிட்டல் உலகில் யூடியூபை திறந்தாலே நாம் அதிகம் கேட்கும் வார்த்தைகளாக இருக்கிறது.

ஆரம்பத்தில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக யூடியூப் சேனல் ஆரம்பித்தவர்கள்... இன்று கன்டன்டே இல்லை என்றாலும் காசு வருது என்று ஒன்றுக்கு மூன்று சேனல்களை தொடங்கி விடுகிறார்கள்.

அதுவும் தன்னை இன்ஃப்ளூயன்சர் என சொல்லிக்கொண்டு யூட்யூபில் வலம் வருபவர்கள் இன்று ஏராளம்..

"இந்த பொருள் வாங்குங்கள்" என்று ரிவ்யூ கொடுப்பது... காலையில் எழுந்து பல் துழக்குவது முதல் இரவு தூங்க செல்வது வரைக்கும் தன்னுடைய ரொட்டின் லைஃபை அப்படியே வீடியோவாக எடுத்து எடிட் செய்து இவர்கள் போடும் வீடியோக்களை... எப்போது வெளிவரும் என காத்திருந்து பார்க்கும் கூட்டத்தால்... யூடியூபர்களின் காட்டில் காசுமழைதான்.

தொட்டதற்கெல்லாம் youtube என்றாகிவிட்ட இந்த காலத்தில்... ஒரு வீடியோவை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து மாதாமாதம் லம்பாக ஒரு அமவுண்டை வருமானமாக அள்ளி விடுகின்றனர், யூடியூபர்கள்

அதுவும் அண்டை மாநிலமான கேரளாவில் சில யூடியூபர்களின் ஆண்டு வருமானம் மட்டும் இரண்டு கோடியாம்!

சமீபமாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை அதிகரித்துள்ள யூடியூபர்கள்... ஆடம்பரமாக புதிய வீடு கட்டுவது... நிலங்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.

யூடியூபில் இவ்வளவு சம்பாதிக்கலாமா ? என பலரும் ஆச்சரியமாக பேசி வர... இந்திய வருமானவரித்துறை யோஅதிரடியாக ஆக்ஷனில் இறங்கி யூடியூபர்களை அதிர வைத்து விட்டது.

வியாழன் முழுவதும் பிரபல யூடியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர், வருமான வரி துறையினர்.

மலையாள நடிகை பேர்லே மானி உட்பட பத்துக்கும் மேற்பட்ட யூடியூபர்கள் தற்போது வருமானவரித்துறை சோதனைக்கு ஆளாகியுள்ளனர்.

எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், காசர்கோடு என ஒரே நாளில் பல்வேறு மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது.

யூடியூபர்கள் ஈட்டிய வருவாய் தொடர்பான வங்கி அறிக்கைகள்... மற்றும் பிற பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வரும் அவர்கள், இனி வரும் நாட்களில் மேலும் சில யூடியூபர்களின் வீடுகளில் சோதனை செய்ய இருப்பதாக அதிரடியாக அறிவித்துள்ளனர்.

இதனால் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாட்டு யூடியூபர்கள் தங்களின் வருமான கணக்கை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

Tags:    

மேலும் செய்திகள்