அரசு வேலையின் மோகம்.. அண்ணன், அண்ணி மீது போலி புகார்.. வெளிவந்த அதிமுக பிரமுகரின் தில்லாலங்கடி வேலை

Update: 2023-07-02 09:17 GMT

விருதுநகரில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததாக அதிமுக பிரமுகர் விஜய நல்லதம்பியை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விருதுநகரை சேர்ந்த அதிமுக பிரமுகரான விஜயநல்லதம்பி கடந்த 2022ஆம் ஆண்டு தனது சகோதரர் ரவிச்சந்திரன் மற்றும் சகோதரரின் மனைவி மீது, காவல் நிலையத்தில் பணமோசடி புகார் அளித்தார். அதில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 20 பேரிடம், ஒரு கோடியே 20 லட்ச ரூபாய் பணம் பெற்று இருவரும் மோசடி செய்ததாகவும், இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். போலீசார் விசாரித்த நிலையில், புகார் அளித்த விஜயநல்லதம்பியே பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததும், தனது அண்ணன் அண்ணி மீது போலி புகார் அளித்ததும் தெரியவந்தது. உடனடியாக விஜயநல்லதம்பியை கைது செய்த போலீசார், அவர் மீது ஏராளமான பணமோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதுகுறித்தும் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்