சபரிமலை பிரசாதத்தில் தரம் குறைந்த ஏலக்காய்.. உடலை பாதிக்கும் பூச்சிக்கொல்லி..?

Update: 2023-01-05 15:57 GMT

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிரசாதமாக தேவசம்போர்டு சார்பாக தயாரிக்கப்படும் அரவணை பாயாசம் மற்றும் அப்பத்தை வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில் அரவணை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஏலக்காய் தரமானதாக இல்லை என்பது திருவனந்தபுரத்தில் உள்ள அரசு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

உணவுப் பாதுகாப்புத் தரத்தின்படி அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பதால் ஏலக்காய் பாதுகாப்பானது அல்ல என்றும் ஆய்வக அறிக்கை கூறுகிறது.

ஐயப்பா மசாலா நிறுவனம் அரவணை தயாரிக்கப் பயன்படுத்தும் ஏலக்காய் தரமில்லை என கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் கேரள உயர்நீதிமன்ற தேவசம் பெஞ்ச் உத்தரவுப்படி, சபரிமலை செயல் அலுவலர் அரவணை தயாரிக்க பயன்படுத்தும் ஏலக்காய் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பினார்.

இது குறித்து இன்று மீண்டும் தேவசம் பெஞ்ச் விசாரிக்க உள்ளது. முறையான டெண்டர் விடாமல் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஏலக்காயை திருவாடானை அரசு ஆய்வகத்தில் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்