"கஞ்சா கேஸ்ல உள்ள தள்ளிட்டாங்க..என் வீட்டு ஆளுங்க தான் காரணம்..மிரட்டும் டிஎஸ்பி"-கதறும் காதல் மனைவி

Update: 2023-02-15 07:15 GMT
  • தனது குடும்பத்தினரின் தூண்டுதலின் பேரில், காதல் கணவரை கஞ்சா வழக்கில் போலீசார் கைது செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
  • தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுபாஷ், சண்முக பிரியங்கா ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
  • இவர்களது காதலுக்கு சண்முக பிரியங்கா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
  • இந்நிலையில், சுபாஷ் சென்னையில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார்.
  • அப்போது, வீட்டின் பின்புறம் கஞ்சா இருந்ததாக கூறி போலீசார் அவரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
  • இதனிடையே, தன்னுடைய குடும்பத்தினர் தூண்டுதலின் பேரில், கணவர் சுபாஷ் மீது, போலீசார் வேண்டுமென்றே கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் சண்முக பிரியா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்