தீப்பெட்டி தகராறால் பறிபோன உயிர்..பழிக்குப்பழி உணர்ச்சியால் பயங்கரம்

Update: 2023-04-26 11:18 GMT

சென்னை வியாசர்பாடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாளில் தனது நண்பர்களோடு கடற்கரையில் மது அருந்தி கொண்டிருந்துள்ளார்.அப்போது சஞ்சயின் நண்பரான அஜித்திடம் அருகில் மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு நபரான தேவா தீப்பெட்டி கேட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாக்குவாதம் ஏற்பட்டு தேவாவை சஞ்சய் தாக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த தேவா தன்னுடைய ஆட்களோடு வந்து சஞ்சையை சுற்றி வளைத்து கத்தியால் குத்தியும், பலமாக தாக்கியும் விட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். படுகாயங்களுடன் மீட்க்கப்பட்ட சஞ்சய் மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார் ஒரு சிறார் உட்பட 8 பேரை தற்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒரு நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்