வாழ்வதே ஒரு திரில்.! அதுல எதுக்கு இதெல்லாம்? லைக்ஸுக்கு ஆசைப்பட்டு பறிபோன உயிர்..!

Update: 2023-07-24 11:48 GMT

ஷிமொகா மாவட்டம் பத்ராவதியைச் சேர்ந்த சரத்குமார் என்று இளைஞர் தனது நண்பருடன் உடுப்பி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்று இருந்தார். உடுப்பி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதன் காரணமாக நீர்வீழ்ச்சி மற்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இந்நிலையில் அரசன்குடி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு பாய்ந்து ஓடும் நீருக்கு மத்தியில் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். சரத்குமார் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்ய வேண்டும் என்று கூறி நீர்வீழ்ச்சிக்கு மிக அருகில் ஒரு பாறையின் மீது நின்று தனது நண்பனை வீடியோ எடுக்க கூறி இருக்கிறார். அப்போது பாறையில் இருந்த ஈரப்பதத்தில் கால் வழுக்கி விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இளைஞர் நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்