"துணைநிலை ஆளுநர் நேரில் வர வேண்டும்" - துப்பாக்கிச்சூட்டை கண்டித்து மக்கள் போராட்டம்
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அப்பர் டாங்ரி என்ற பகுதியில், பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
காயமடைந்த 7 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் அப்பர் டாங்ரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் தோல்வி அடைந்து விட்டதாக தெரிவித்த மக்கள், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேரில் வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.