கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சூளகிரி அருகே உள்ள வனப்பகுதியில் சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் செட்டிப்பள்ளி, எலசேப்பள்ளி, புளியரசி, வரதாப்புரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காட்டுயானை முகாமிட்டுள்ளதால் சூளகிரி சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.