கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் - கிஷோர் கே.சாமி சாமியிடம் விசாரிக்க உத்தரவு

Update: 2022-11-29 04:51 GMT

கார் குண்டு வெடிப்பு தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிட்ட கிஷோர் கே.சாமியிடம் சைபர் கிரைம் போலீஸார் ஒருநாள் விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்த வழக்கு கோவை 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவரை காவலில் எடுத்து விசாரிக்க 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியிடம் மனு தாக்கல் செய்தனர். கிஷோர் கே சாமியிடம் ஆறு மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்த நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். போலீசார் அவரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று உடற் பரிசோதனை செய்தனர். பின்னர் , கோவை மாநகர காவல் ஆணையர் வளாகத்திலுள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்