மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் மீண்டும் நடை திறப்பு... அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து தீபாரதனை காண்பித்தார். பின்னர் ஆழி குண்டத்தில் நெய் தேங்காய் ஏறிய பின் பக்தர்கள் 18 படி ஏற அனுமதிக்கபட்டனர்
ஜனவரி 19ஆம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கிடையே, ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையையொட்டி, ஜனவரி 12 ஆம் தேதி பந்தளத்திலிருந்து திருவாபரணம் ஊர்வலம் புறப்படுகிறது.
மகர விளக்கு பூஜை நிறைவுக்கு பிறகு, 20 தேதி காலை 7 மணிக்கு கோவில் நடை பந்தள ராஜா குடும்ப முன்னிலையில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜையையொட்டி, சன்னிதானத்தில் மட்டும் ஆயிரத்து 409 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.