காய்ச்சலில் சிக்கித் தவிக்கும் கடவுள்தேசம்..11 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு... பரிதாபமாக ஒருவர் பலி..

Update: 2023-07-13 11:38 GMT

கேரளாவில், கடந்த மே மாதம் முதல், பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. திருச்சூர் மருத்துவக் கல்லூரியில் மலேரியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பாலக்காட்டைச் சேர்ந்த ரஃபி என்பவர் நேற்று உயிரிழந்தார். மாநிலம் முழுவதும் இதுவரை 11 ஆயிரத்து 885 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலும், எலிக்காய்ச்சலும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்