- எலத்தூர் ரயில்நிலையத்தில் டி ஒன் பெட்டியில் இருந்த பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
- தீக்காயம் அடைந்த 9 பணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாருக் சைஃபியை மகாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
- பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், அந்த நபரை சாலை மார்க்கமாக கார், ஜீப் என மாற்றி மாற்றி போலீசார் கேரளா அழைத்து வந்தனர்.
- கோழிக்கோடு காவல்நிலையத்தில் வைத்து ஷாருக்கு சைஃபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அதன் பின், உரிய ஆவணங்கள் தயார் செய்து இன்று மதியத்திற்கு மேல் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.