மலையாள திரையுலகில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் - வருமான வரித்துறை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
- மலையாள திரைத்துறையில் 225 கோடி ரூபாய் கருப்பு பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
- கேரளாவில் கடந்த டிசம்பர் மாதம் பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளர்களான ஆன்டனி பெரும்பாவூர், ஆன்டோ ஜோசப், லிஸ்டின் ஸ்டீபன், நடிகரும், தயாரிப்பாளருமான பிரித்விராஜ் உள்பட சினிமா தயாரிப்பாளர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
- இந்த சோதனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் படி, மலையாள சினிமாவில் 225 கோடி ரூபாய்க்கு, கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
- இதன் மூலம் வருமானவரித் துறைக்கு ரூ.72 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
- பிரபல தயாரிப்பாளர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கிக் குவித்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- படங்களை வெளிநாடுகளுக்கு விநியோகித்ததன் மூலமும் பெரும் மோசடி நடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.
- இவர்களது வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் குறித்தும் வருமானவரித் துறை விசாரணை நடத்தி வருகிறது.