எரிபொருள் மீதான மாநில அரசின் வரி... போராட்டத்தில் குதித்த பாஜக இளைஞரணியினர் - தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைத்த போலீசார்

Update: 2023-02-08 05:14 GMT

எரிபொருள் மீதான மாநில அரசின் வரியை ரத்து செய்ய கோரி, கேரள தலைமைச் செயலகத்தை பாஜக இளைஞரணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் போது போலீசார் அமைத்திருந்த தடுப்பு வேலியைத் தாண்டி செல்ல இளைஞர்கள், முயன்றனர்.

அப்போது, போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர்.

இதனால் கேரள தலைமை செயலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்