அன்றே தமிழ் சினிமாவை , அதிரவைத்த இயக்குனர் சிகரம்! கே.பாலச்சந்தர் உருவாக்கிய ராஜபாட்டை!
1930ல் நன்னிலத்தில் பிறந்த கைலாசம் பாலச்சந்தர், அண்ணாமலை பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின், ஒரு பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். 1950ல் சென்னையில் உள்ள மத்திய அரசின் ஏ.ஜி அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்.
நாடகத்துறையில் மிகுந்த ஈடுப்பாடு கொண்டிருந்த பாலச்சந்தர், பல்வேறு மேடை நாடகங்களை எழுதி, இயக்கி பெரும் புகழ் பெற்றார் . 1964ல் எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதி, திரைபடத் துறையில் நுழைந்தார்.
இவரின் கதை வசனத்தில் உருவான சர்வர் சுந்தரம் படம், நாகேஷின் திரைபட வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1965ல் நீர்குமிழி படத்திற்கு கதை, வசனம் எழுதி இயகுனராக உருவெடுத்தார்