பார்வையற்றோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான வீரருக்கு கனிமொழி எம்.பி. பாராட்டு

Update: 2023-07-03 01:58 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான வீரர், திமுக எம்.பி, கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த 24 வயதான மகாராஜா என்பவர், பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை சந்தித்த மகாராஜா, தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் வீரன் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்...

Tags:    

மேலும் செய்திகள்