திருவிழாவில் ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி 12 வயது சிறுமி துடி துடித்து பலி.. "அழாதம்மா.."தாயின் கண்ணை துடைக்கும் தம்பி - காஞ்சிபுரத்தை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்

Update: 2023-03-15 08:04 GMT
  • காஞ்சிபுரம் அருகே ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி படுகாயம் அடைந்த சிறுமி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
  • வாலாஜாபாத் அடுத்த விச்சாந்தாங்கலில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.
  • இதில், மாட்டு வண்டியில் ஜெனரேட்டர் வைத்து வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
  • அப்போது, யாரும் எதிர்பாராதபோது, 12 வயது பள்ளி சிறுமியான லாவண்யா மாட்டு வண்டியில் பின்புறத்தில் ஏறியபோது, அவரின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது.
  • இதில், படுகாயம் அடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.
  • இதனிடையே அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, ஜெனரேட்டர் உரிமையாளரான முனுசாமி மீது வழக்குபதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்