கள்ளக்குறிச்சி வன்முறையின் போது பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஐந்து இளைஞர்களை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்தனர். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக சிறப்பு புலனாய்வு குழு போலீசார் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு பேரை கைது செய்து இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக மேலும் ஐந்து பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சைபர் கிரைம் உதவியுடன் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதான கைது நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல்துறையினர் தங்களது செய்து குறிப்பில் தெரிவித்துள்ளனர்.