"குடும்ப ஆட்சிக்கு முடிவு - வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும்" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வாரிசு அரசியலை ஒழிக்க பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா தெரிவித்துள்ளார்.
கோவையில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்தியமைச்சர் எல்.முருகன், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், பொன்.ராதா கிருஷ்ணன், சி.பி.ராதா கிருஷ்ணன், விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்று பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, குடும்ப ஆட்சி மற்றும் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.