விழுப்புரம் சரக புதிய டிஐஜியாக பதவியேற்ற உடன் விடுத்த எச்சரிக்கை

Update: 2023-05-21 11:02 GMT

கள்ளசாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் சரகத்தின் புதிய காவல்துறை துணைத்தலைவர் ஜியாவுல் ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் சரகத்தின் புதிய காவல்துறை துணைத்தலைவராக ஜியாவுல் ஹக் இன்று பதவியேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சியில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்தார். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய அவர், மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்