முதல்வரின் ஒரு நாள் டெல்லி பயணம் - குடியரசுத் தலைவருடன் திடீர் சந்திப்பு - இதுதான் காரணமா?
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னை கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவிற்கு வருமாறு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். விமானத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதலமைச்சர், காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று இரவே சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.