வடசென்னைக்கு மட்டும் இவ்வளவா..? - கோவை, மதுரையில் இப்படி ஒரு திட்டமா..!

Update: 2023-03-20 16:41 GMT

வடசென்னை வளர்ச்சி திட்டம் அடுத்த மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ள அரசு, அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

கோவை, மதுரையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் வகையில், அனைத்து துறையினருடன் கலந்தாலோசித்து விரைவில் சுற்றுலா கொள்கை ஒன்று வகுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் வளமிகு வட்டாரங்கள் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் திட்டங்களையும் சேவைகளையும் கடைக்கோடி மக்களும் பெற்றும் பயனடையும் வகையில் அனைத்து ஊராட்சிகளிலும், நகர்ப்புற பகுதிகளிலும் ஒரு புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில பட்டாவை தடையின்றி மாற்றம் செய்வதற்காக வருவாய் பத்திரப்பதிவு, நகர் ஊரமைப்பு துறை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து புதிய மென்பொருள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் மேல் புதுப்பிக்கதக்க வல்ல சிறப்பு நிறுவனம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டுக்குள் 77 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 15 புதிய நீரேற்று மின் திட்டங்கள் அரசு - தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

711 தொழிற்சாலைகளிலுள்ள 8.35 தொழிலாளர்களுக்கு மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை இந்த ஆண்டு திறந்து வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்