Go First விமான நிறுவனம் திவாலா? - மே 12 வரை விமான சேவைகள் ரத்து...

Update: 2023-05-06 12:27 GMT

திவால் நிலையில் உள்ள Go First விமான நிறுவனம், மே 12 வரை தனது சேவைகளை நிறுத்தி வைத்துள்ளது.

Go First விமான சேவை நிறுவனம், அதீத கடன் சுமை, தொடர் நஷ்டம் மற்றும் விமான எஞ்சினகள் பிரச்சனைகள் காரணமாக, தன்னிச்சையாக திவால் செய்து கொள்ள, தேசிய கம்பேனி சட்ட ஆணையத்தில் விண்ணப்பம் செய்திருந்தது.

இந்நிறுவனம் திவால் செய்யப்பட்டு, ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டால் அந்த ஏலத்தில் இதன் உரிமையாளரான வாடியா குழு பங்கு பெற முடியாது. வாராக் கடன்கள் எதுவும் ஏற்படாததால், ஏலத்தில் பங்கு பெற சட்ட விதிகளில் இருந்து விலக்கு பெற, வாடியா குழுமம் விண்ணப்பம் செய்துள்ளது. மே 9 வரை விமான சேவைகளை நிறுத்தி வைத்திருந்த Go First, இதை மே 12 வரை நீட்டித்துள்ளது. டிக்கெட் கட்டணங்கள் முழுவதுமாக திருப்பி அளிக்கப்படும்

என்று அறிவித்துள்ளது. ஏர் பஸ் ரக விமானங்களை கொண்டுள்ள Go Firstஇல் 740 விமானிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் சுமார் 700 பேர், ஏர் இந்தியாவில் சேர விண்ணப்பித்துள்ளனர். இன்டிகோ மற்றும் அக்‌ஷா நிறுவனங்களுக்கும் இவர்களில் பலர் விண்ணபம் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்