பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி? - வைரல் டுவிட்!
பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி? - வைரல் டுவிட்!
கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலக மாட்டார் என பிசிசிஐ செயலர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது, கங்குலி தனது டிவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் பயணத்தை தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிறது. கிரிக்கெட் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. என்னுடைய கிரிக்கெட் பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இன்று மக்களுக்கு உதவக் கூடிய புதிய அத்தியாத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறேன். புதிய திட்டத்திற்கும் உங்களுடைய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன் என குறிப்பிட்டிருந்தார். இதனால், பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக வதந்திகள் பரவின. இதற்கு, முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கங்குலி ராஜினாமா செய்யவில்லை என ஜெய்ஷா விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில் தான் ஒரு உலகளாவிய புதிய கல்வி செயலியை ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் கங்குலி தெரிவித்துள்ளார்.