“பிக்பாஸில் அசீமின் வெற்றியில் முறைகேடு.. கேட்டால் கொலை மிரட்டல்“ - பிரபல யூடியூபர் பரபரப்பு புகார்
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த யூடியூபர் ஜோ மைக்கேல்,
தனியார் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில், சீரியல் நடிகர் அசீம் வெற்றி பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அசீமின் வெற்றி குறித்து தகவல் கேட்டு, டெல்லியில் உள்ள இந்தியன் ஒளிபரப்பு அறக்கட்டளையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவித்தார். இதனால் அசீம் மற்றும் அவரது நண்பர்கள் தேவராஜ், சிங்கார வேலன் ஆகியோர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அளித்த மனுவை திரும்பப் பெறக்கோரி, தொடர்ந்து தன்னை மிரட்டி வருவதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்ததாகவும் தெரிவித்தார்.