அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்றது. டப்ளினில் நடைபெற்ற ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால், போட்டி 12 ஓவர்களாக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்தது. அந்த அணியின் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 10 ஓவரிலேயே இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தீபக் ஹுடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்து வெற்றிக்கு உதவினார்.