"இந்தியா - ஆஸி. கடைசி டெஸ்ட்டிற்கும் ஸ்டீவ் ஸ்மித்..." - ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
இந்தியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நீடிப்பார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து உள்ளது. குடும்ப சூழ்நிலையால் தாயகம் திரும்பியுள்ள ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் கடைசி டெஸ்ட்டில் பங்கேற்க மாட்டார் என்றும், இதனால் தற்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தே கடைசிப் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.