அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள்.. இரண்டே நாளில் 2,044 பேர் கைது! | Assam

Update: 2023-02-04 11:32 GMT

அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் இரண்டு நாட்களில் 2ஆயிரத்து 44 பேர் கைது செய்யப்பட்டனர். அசாமில் குழந்தை திருமணம் அதிகரித்து வருவதை தடுக்க, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குழந்தை திருமணத்தில் ஈடுபடுவோர் கைது செய்யப்படுவார் என முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். அதன்படி 2 நாட்கள் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் 2 ஆயிரத்து 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரும்கஞ்ச் பகுதியில் 79 பேர், பிஸ்வநாத்தில் 139 பேர், பெஹாலியில் 30 பேர், ஹலீமில் 33 பேர், தூப்ரியில் 126 பேர், கோசாரில் 72 பேர், பர்பெட்டாவில் 114 பேர் என கைது பலர் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 52 பேர் மத குருக்கள் என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்