தமிழகத்திலேயே இந்த மாவட்டத்தில்தான் அதிகபட்ச வெயில்..!

Update: 2023-04-20 02:29 GMT

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது.

சென்னை மீனம்பாக்கத்தில் 101.84 டிகிரியும், தருமபுரியில் 100.76 டிகிரியும் பதிவானது

கோவையில் 101.66 டிகிரியும் ஈரோட்டில் 105.08 டிகிரியும் பதிவானது. கரூர், பரமத்தி வேலூரில் அதிகபட்சமாக 105.80 டிகிரி வெயில் வாட்டி வைத்தது.

மதுரை நகரில் 103.64 டிகிரியும், மதுரை விமான நிலையத்தில் 103.64 டிகிரியும்

நாமக்கல்லில் 103.10 டிகிரியும் சேலத்தில் 102.92 டிகிரியும் தஞ்சாவூரில் 100.40 டிகிரியும் வெப்பம் நிலவியது

திருச்சியில் 103.10 டிகிரியும், திருப்பத்தூரில் 102.20 டிகிரியும் வெயில் வாட்டி வதைத்தது.

திருத்தணியில் 100.58 டிகிரி, வேலூரில் 103.82 டிகிரி வெப்பம் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்