கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், வீட்டில் தோஷம் கழிப்பதாகக் கூறி கைவரிசை காட்டி வந்த ஆசாமியை, போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-19 13:40 GMT

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர மனைவி லட்சுமி, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது வீட்டுக்கு வந்த ஆசாமி ஒருவர், வீட்டில் தோஷம் இருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய 14 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் எனவும் கேட்டு வாங்கியுள்ளார். பின்னர் சொம்புவில் குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு ஆசாமி கேட்க, கிருஷ்ணனும் எடுத்து வந்துள்ளார். பின்னர், அந்த சொம்புவில் இருந்த தண்ணீரை, வீடு முழுவதும் தெளிக்குமாறு கூறியுள்ளார். கிருஷ்ணனும் வீடு முழுவதும் தண்ணீர் தெளித்து விட்டு வந்து பார்த்தபோது, 14 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஆசாமி அங்கிருந்து மாயமாகியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கைவரிசை காட்டிய நபர், நெல்லையை சேர்ந்த சூர்யா என தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, இதே பாணியில் பலரிடம் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து சூர்யாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்