KGF பாணியில்.. கடலுக்குள் குவியல் குவியலாக தங்கம்.. எந்நேரமும் கரை ஒதுங்கலாம்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு
மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடல் பகுதியில் இருந்து, சுமார் 25 கிலோ எடை கொண்ட கடத்தல் தங்கம் இலங்கையில் இருந்து கொண்டு வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடைபெற்ற ரோந்துப் பணியின்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு நாட்டுப் படகை மடக்கிப் பிடித்து அதில் இருந்த 3 பேரை விசாரித்தனர்.
அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு இதே பகுதியில் இருவரிடம் விசாரணை நடத்தியதில், நாட்டுப்படகில் கொண்டு வந்த 3 பார்சல்களில், இரண்டு பார்சல்கள் கடலுக்குள் போடப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, கடலுக்குள் போடப்பட்ட சுமார் 15 கிலோ எடை கொண்ட தங்கத்தை மீட்க மத்திய வருவாய் புலனாய் பிரிவு மற்றும் கடலோர காவல் படையினர், சிறப்பு பயிற்சி பெற்ற ஸ்கூபா வீரர்களை வரவழைத்து தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.