"அமைச்சர்களே மிரட்டும் தொனியில் பேசினால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சிப் பாதைக்குள் செல்லும்" - எடப்பாடி பழனிசாமி

Update: 2023-02-08 13:55 GMT

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக சார்பில் 111 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடனும், அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு, அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுப் பேசினார். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறிய அவர், அமைச்சர்களே மிரட்டும் தொனியில் பேசும்போது, அவர்களால் தமிழ்நாடு எப்படி வளர்ச்சிப் பாதைக்குள் செல்லும் என்றும் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்