பள்ளிக்கரணை சதுப்பு நில ஆக்கிரமிப்பாளர்கள்.. `வெளியேற்றம்..' - கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2024-11-19 12:13 GMT

சென்னை, துரைப்பாக்கம் பகுதியில், 87 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மகாலெட்சுமி நகர் என்ற பகுதியை சதுப்பு நிலப்பகுதி என வனத்துறை அறிவித்தது.அப்பகுதியை காலி செய்யும்படி அப்பகுதி மக்களுக்கு, நவம்பர் 7இல் நோட்டீஸ் அனுப்பியது.இதை எதிர்த்து லட்சுமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. பள்ளிகரனை சதுப்பு நில ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அகற்றப்பட்டு வருவதாகவும், மகாலெட்சுமி நகர் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் வருவதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அப்பகுதியில் உள்ள 47 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களை பெரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு மறுகுடியமர்வு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இது சம்பந்தமாக கடந்த 7ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியதாகவும், 15 நாட்கள் அவகாசம் வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார். அதன் படி, மகாலெட்சுமி நகர் பகுதியில் உள்ள சதுப்பு நில ஆக்கிரமிப்பாளர்கள் வரும் நவம்பர் 22ம் தேதி மறுகுடியமர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

Tags:    

மேலும் செய்திகள்