ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, ஜார்கண்ட் மாநில பாஜக பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது ஜார்க்கண்ட் முக்தி முழுசா என்று எழுதப்பட்ட வீட்டின் முன்பு இஸ்லாமிய மக்கள் தங்களது உடைமைகளுடன் நிற்பது போலவும், பின்னர் அவர்கள் அனைவரும் அந்த வீட்டிற்குள் நுழைந்து ஒட்டுமொத்த வீட்டையே ஆக்கிரமித்து கொள்வது போலவும் அந்த வீடியோ அமைந்திருந்தது. ஒட்டுமொத்த ஜார்கண்டின் முகத்தையே மாற்றிவிடுவார்கள் என அந்த வீடியோவிற்கு தலைப்பிடப்பட்டு இருந்தது. வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல் காரர்களுக்கு, ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடமளித்து அவர்களுக்கு வாக்க்குரிமையும் அளித்திருப்பதாக, பாஜக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அதனை குறிப்பிடுவது போல ஜார்க்கண்ட் மாநில பாஜக மறைமுகமாக இத்தகைய வீடியோவை வெளியிட்டிருந்தது.இது குறித்து ஜே.எம்.எம் மற்றும் காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வீடியோவை நீக்குமாறு பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.