"குழந்தை உயிரோடு தான் இருக்கா தெரில" மாமியாரும்,கணவனும் செய்த செயல் - வாசலில் அமர்ந்து கதறும் தாய்..!

Update: 2023-04-22 05:20 GMT

போரூர் அருகே வீட்டிற்குள் குழந்தையை அடைத்து வைத்திருப்பதாகக் கூறப்பட்ட வழக்கில், வீட்டிற்குள் குழந்தை இல்லாததால் குழப்பம் நிலவி வருகிறது.பெரும்பாக்கத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வன் என்பவருக்கும், மைசூரைச் சேர்ந்த மதுபாலா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மதுபாலா தனது கணவருக்கு போதை பழக்கம் இருப்பதாகக் கூறி, தனது நான்கு வயது மகனுடன் மைசூரில் வசித்து வந்துள்ளார். இதனிடையே, செந்தமிழ்செல்வன் மைசூருக்குச் சென்று குழந்தையை அழைத்து வந்ததாக தெரிகிறது. இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், குழந்தையை தாயாரான மதுபாலாவின் ஒப்படைக்க வேண்டுமென மைசூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், செந்தமிழ்செல்வன் குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென மதுபாலா தனது தாயாருடன், செந்தமிழ்செல்வன் வீட்டு வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தியுள்ளார். ஆனால், மதுபாலாவின் மாமியார் சாந்தி, குழந்தையை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், போலீசாருடன் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, குழந்தை வீட்டில் இல்லாதது கண்டு மதுபாலா அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும், குழந்தையை தன்னிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்