திபெத்தில் மனித உரிமை மீறல் சம்பவம்... 2 சீன அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

Update: 2022-12-12 07:18 GMT

திபெத்தில் மனித உரிமை மீறல்களுக்காக அமெரிக்கா 2 சீனர்கள் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

2016 முதல் 2021 வரை திபெத்தில் சீனாவின் தலைவராக இருந்த வு யிங்ஜி மற்றும் 2018 ஆம் ஆண்டு முதல் இமயமலைப் பகுதியில் சீனாவின் காவல்துறைத் தலைவராக இருந்த ஜாங் ஹாங்போ ஆகியோர் மீது சித்ரவதை, கைதிகள் கொலை, கட்டாய கருத்தடை உள்ளிட்ட காரணங்களுக்காக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - சீனா இடையே மெல்ல மெல்ல பதற்றம் தணிந்து வரும் சூழலில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்