இந்த வருடம் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் எத்தனை மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்?

Update: 2023-03-11 10:40 GMT
  • தமிழ்நாடு மற்றும் புதுவையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் திங்கட்கிழமை தொடங்கவுள்ளது.
  • தமிழ்நாடு மற்றும் புதுவையில் வரும் 13-ஆம் தேதி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ளன
  • தமிழ்நாட்டில் இந்த பொதுத்தேர்வை, 4 லட்சத்து 3 ஆயிரத்து156 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 மாணவிகள் என 8 லட்சத்து 36 ஆயிரத்து 593 பேர் எழுதவுள்ளனர்
  • புதுச்சேரியில் 6 ஆயிரத்து 982 மாணவர்கள் மற்றும் 7 ஆயிரத்து 728 மாணவிகள் என 14 ஆயிரத்து 728 பேர் எழுதவுள்ளனர்.
  • தமிழ்நாடு மற்றும் புதுவையில் 3 ஆயிரத்து 225 மையங்களில் இந்த பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.
  • தேர்வு பணிக்காக 46 ஆயிரத்து 870 அறை கண்காணிப்பாளர்கள் தயாராக உள்ளனர். அதேபோல் தேர்வுக்காக 4 ஆயிரத்து 235 உறுப்பினர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 14 ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
  • தமிழ்நாட்டில் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 மாணவர்களும், புதுவையில் 14 ஆயிரத்து 376 மாணவர்களும் இந்த தேர்வை எழுதவுள்ளனர்.
  • பொதுத்தேர்வில் ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்