யோகா கிலாஸ் , ஜூம்பா கிலாஸ் அடயேங்க ஆன்லைன் கிலாஸ்கூட பார்த்திருப்போம்... டான்ஸ், மியூசிக், பாட்டுன்னு.. எல்லாத்துக்கும் கிலாஸ் கண்டுபிடிச்ச மனுஷங்க... இப்போ... எப்படி சிரிக்கனுங்கறத கத்துக்கொடுக்குறதுக்கும் கிலாஸ் எடுக்க ஆரமிச்சுட்டாங்கப்பா...
அதாவது கொரோனா வந்தாலும் வந்துச்சு... ஹெட்செட், கம்மல், டிரெஸ் மாதிரி... மாஸ் அணியறதும் நம்ம வாழ்க்கையில ஒரு அங்கமா மாறிடுச்சு... கோவில், ஸ்கூல், ஆப்பீஸ்ன்னு.... சாப்பிடுற நேரம் தவிர 24 மணி நேரமும் மாஸ்க் போட்டே பழகிபோன சிலர்... கோவிட் முடிஞ்சதுக்கு அப்புறமும் மாஸ்க கழட்டவே கூச்சப்படுறாங்களாம்ப்பா...
அப்டின்னு நான் சொல்லல... ஜப்பான்ல ஒரு ஆய்வு அறிக்கையிலேயே சொல்றாங்க... அதுவும் மாஸ்க் போட்டே பழகிட்டதால ஜப்பானியர்கள்ள... சிரிக்கிறதையே நிறுத்திட்டாங்களாம்...
இதை நோட் பண்ண... டோக்கியோவுல இருக்க ஒரு கல்வி நிறுவனம்... தினமும் ஒரு மணி நேரம் தங்களோட மாணவர்களுக்கு... எப்படி கரெக்ட்டா சிரிக்கனும், சிரிக்கும்போது முகபாவனைய எப்படி மாத்தனும்ன்னு கிலாஸ் எடுக்குறாங்க...
அதுலயும் முகத்துல இருக்குற சிரிப்புக்கு... 90, 80ன்னு மார்க் போடுறதுக்கு ஆப்லான் கண்டுபிடிச்சி எக்சாமே நடத்துறாங்க...