தரையில் இருந்து 6000 அடி உயரம்..அடிக்கடி ஏற்படும் நில அதிர்வு, நிலச்சரிவு -முதலமைச்சர் நேரில் ஆய்வு
தரையில் இருந்து 6000 அடி உயரம்..அடிக்கடி ஏற்படும் நில அதிர்வு, நிலச்சரிவு -முதலமைச்சர் நேரில் ஆய்வு
உத்தரகாண்டில் நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்த ஜோஷிமத் பகுதியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு மேற்கொண்டார். உத்தரகாண்டின் தரை தளத்தில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவதால், அங்கு வாழும் மக்கள் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்மையில் ஏற்பட்ட நில அதிர்வால் ஜோஷிமத் கோவில், வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 600 வீடுகள் பாதிக்கப்பட்டதால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். நில அதிர்வில் மூவாயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஜோஷிமத் பகுதியில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஆய்வு செய்தார்.