"கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்" - வானிலை ஆய்வு மையம்

Update: 2023-07-23 04:03 GMT

கேரள மாநிலம் கோழிக்கோடு, வயநாட்டில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. கோழிக்கோடு மாவட்டம் தாமரைச்சேரியில், பல இடங்களில் காற்றுடன் மழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களிம் மின் கம்பம் முறிந்து விழுந்த நிலையில், அதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர் ஈடுபட்டனர். மேலும், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனிடையே, கேரளாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்