எம்எல்ஏ கொலையின் முக்கிய சாட்சி கொலை.. காரில் இருந்து இறங்கியதும் பயங்கர துப்பாக்கி சூடு.. சினிமாவை மிஞ்சிய கொலை - பதைபதைக்கும் காட்சி

Update: 2023-02-26 04:05 GMT
  • உத்தரப்பிரதேசத்தில் எம்எல்ஏ கொலை வழக்கின் முக்கிய சாட்சியையும், பாதுகாப்புக்கு இருந்த போலீசாரையும் ஒரு கும்பல் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த 2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜூ பால் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் வழக்கறிஞர் உமேஷ் பால். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் இருந்த அவர், காரில் இருந்து இறங்கிய போது, மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் கொன்றது.
  • பாதுகாப்புக்கு இருந்த காவலர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டுள்ளார்.
  • மற்றொரு காவலர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
  • இதுதான் ராம ராஜ்ஜியமா? என்று கேள்வி எழுப்பியுள்ள அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்