டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி… குற்றவாளியை சுட்டுப் பிடித்த காவல்துறை…
டாஸ்மாக் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி… குற்றவாளியை சுட்டுப் பிடித்த காவல்துறை…
பிரபல திருடனுக்கு வலை விரித்த போலீஸ்... கையும் களவுமாக சுற்றி வளைத்து கைது...
தமிழ்நாடு, கேரளான்னு பல இடங்கள்ள கை வரிசை காட்டி வந்த பலே கொள்ளையர்கள ரொம்ப நாளா போலீஸூக்கு தண்ணி காட்டிட்டு வந்திருக்காங்க. கண்கொத்தி பாம்பா காத்திருந்த போலீஸ் கடைசியில அவங்கள எப்படி புடிச்சாங்க தெரியுமா?
காலையில் கடிகார அலாரத்திற்கு பதில், காவல்துறையிடமிருந்து வந்த போன்கால் குற்ற சரித்திரம் நிகழ்சி குழுவின் தூக்கத்தை கலைத்தது…
உடனே சம்பவ இடத்துக்கு செய்தியாளர் சுரேஷோடு விரைந்தோம்…
வளைந்து நெளிந்த குறுகிய பதையை கடந்து நமது இலக்கை அடைந்தபோது… நமக்கு முன்பே காவல்துறை அந்த அப்ரேஷனை நடத்தி முடித்திருக்கிறது.
ஆம், காவல்துறை சுற்றுபோட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் இந்த டாஸ்மாக் கடைசியில் தற்போதுதான் சுடச் சுடச் ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து பணத்தை எடுப்பதற்கு முன்பே குற்றவாளிகளுள் ஒருவரை காவல்துறை கையும் களவுமாக சுட்டுப் பிடித்திருக்கிறார்கள்…
பிடிப்பட்ட குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில்தான் அந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியிருக்கிறது…
நீலகிரி மாவட்டம் , கூடலூர் அருகே உள்ளது குந்தலாடி மலைபகுதி… டீ எஸ்டேட் காடுகள் சூழ்ந்திருக்கும் இந்த பகுதியில் ஏராளமான சிறு கிராமங்கள் உள்ளன.
சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் ஏதும் இல்லாததால் குந்தலாடியில் உள்ள இந்த டாஸ்மாக்கிற்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவது வழக்கம்.
ஒரு நாளைக்கு கிட்டதட்ட இரண்டு லட்சம் ரூபாய் வரை விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் அதே பகுதியைச் சேர்ந்த சாம்பார் மணி என்பவரின் கண்ணை உறுத்தியிருக்கிறது.
சாம்பார் மணி பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிப்பதில் கைத்தேர்ந்தவர். குறிப்பாக கேரள தமிழக எல்லையை குறிவைத்து திருடி வந்திருக்கிறார். இவர்கள் மீது இருமாநிலங்களிலும் பத்திற்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நாளுக்கு நாள் சாம்பார் மணியின் ஆட்டம் அதிகரிக்கவே போலீசார் அவரை கண்கொத்தி பாம்பாக கவனித்து வந்திருக்கிறார்கள்.
இந்த சூழலில் தான் சாம்பார் மணியும், அவரது நண்பர் ஜிம்மியும் குந்தலாடி டாஸ்மாக் கடையை தங்களுடைய அடுத்த டார்கெட்டாக குறி வைத்திருக்கிறார்கள்.