சென்னையை சேர்ந்த தனலட்சுமி என்ற மூதாட்டி, ஆன்லைன் உணவு டெலிவரியால் பணம் கொள்ளை போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் உணவு ஆர்டர் செய்த சிறிது நேரத்தில், உணவு டெலிவரி செய்யாமலேயே டெலிவரி ஆகிவிட்டதாக குறுஞ்செய்தி வந்ததாகவும், பின்பு வாடிக்கையாளர் பிரதிநிதி எண்ணை தொடர்பு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மறுமுனையில் இந்தியில் பேசிய நபர் 'Any Desk plugin' என்ற ஆப்பில் ஸ்கேன் செய்தால், பணம் திரும்ப கிடைத்து விடும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ஆப்பில் ஸ்கேன் செய்தபோது வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் திருடு போனதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.