திருநங்கைகளின் பரத நாட்டியத்தை ரசித்து பார்த்த ஆளுநர் ஆர்.என்.ரவி

Update: 2023-04-08 05:41 GMT

அந்நிய படையெடுப்புக்குப் பிறகு நாட்டில் சேவை மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சத்ய சாய் திருநங்கைகளுக்கான இலவச நடன பயிற்சி பள்ளியின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, திருநங்கைகளும் நம்மில் ஒருவர் தான் என்றும், திருநங்கைகளுக்கான உரிமைகள் என்பது கேட்டுப் பெற வேண்டியது கிடையாது என குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவர்களுக்கான பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்தையும் கொடுத்துள்ளது என்றும், ஒரு சிலரின் ஆழ்மனதில் திருநங்கைகள் பற்றிய வேறு என்ற எண்ணம் உள்ளதாகவும், அதில் மாற்றம் ஏற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பாரத நாட்டின் கலாசாரத்தில், சேவை ஒன்றி உள்ளதாகவும், அந்நிய படையெடுப்புகளுக்கு பிறகு இந்த சேவை மனப்பான்மை மாறி உள்ளதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திருநங்கைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியை ஆளுநர் தமது மனைவியுடன் கண்டு ரசித்து பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்