கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு கோயிலில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
2015-ஆம் ஆண்டு நிகழ்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில், திருச்செங்கோடு மலைக் கோயிலில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் முறையாக ஆய்வு செய்யவில்லை என கோகுல்ராஜ் பெற்றோர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் சுவாதி, தான் திருச்செங்கோடு மலைக்கோவிலுக்கு செல்லவில்லை என வாக்குமூலம் அளித்த நிலையில், கோயிலுக்கு நேரில் சென்று விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஸ் மற்றும் ரமேஷ் ஆகியோர் திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு நேரில் சென்று, அங்கு பல்வேறு நுழைவு வாயில்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.