"சாத்தூர் வெள்ளரி, மதுரை செங்கரும்பு,பண்ருட்டி பலா..." நம்ம ஊரு பொருட்களுக்கு இனி இன்டர்நேஷனல் வேல்யூ - தமிழக அரசின் சூப்பர் பிளான்

Update: 2023-03-21 10:56 GMT

வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய அவர், கடந்த ஆண்டில் சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இதேபோல், அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சுவெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டைமலை கத்தரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்பு கவுனி அரிசி, மூலனூர் குட்டை முருங்கை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற 30 லட்சம் மதிப்பீட்டில், திட்டமிடப்பட்டு இருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்