மலைபோல் குவிக்கப்பட்ட குப்பைகள்...வன விலங்குகள் சாப்பிடுவதால் உயிரிழக்கும் அபாயம் | Kodaikanal
மலைபோல் குவிக்கப்பட்ட குப்பைகள்...வன விலங்குகள் சாப்பிடுவதால் உயிரிழக்கும் அபாயம்
கொடைக்கானல்- வத்தலகுண்டு பிரதான மலைச்சாலையில், பெருமாள்மலை அருகே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை மான் கூட்டங்கள் சாப்பிட்டு வருவதால், அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் கீழ்ப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் உருவாகும் குப்பைகள், பெருமாள்மலை அருகே மறுசுழற்சி செய்யாமல் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த குப்பைகளை வனவிலங்குகள் சாப்பிட்டு வருகிறன்றன. இரு தினங்களுக்கு முன், அங்குள்ள குப்பைகளை மான்கள் சாப்பிட்டுள்ளன. இந்தக் காட்சி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. குப்பைகளை அகற்றி, வனவிலங்குகளைக் காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.