இலவச நீட் பயிற்சி - அரசு பள்ளி மாணவர்களுக்கு நியூ அப்டேட் | neet2022 | govtschoolstudents
அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி 26 ம் தேதி முதல் தொடங்குகிறது.
கடந்தாண்டு வரை ஆன்லைன் வழியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு முதல் நேரடி முறையிலான வகுப்புகள் மீண்டும் தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி 26 ம் தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வாரத்திற்கு ஒரு நாள் சனிக்கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 13 மையங்களில் ஆயிரத்து 500 பேருக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக 12-ம் வகுப்பு மாணவர்கள் 600 பேர் பங்கேற்பார்கள் என்றும், அதன் பிறகு 11ஆம் வகுப்பு மாணவர்கள் 900 பேர் பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.