"அடுத்த மாதம் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்" - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை அண்ணாசாலை மின்வாரிய தலைமை அலுவலகத்தில், மின்வாரிய அலுவலர்களுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மின்வாரிய மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மின்வாரியம் சார்பில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
சென்னை மழைநீர் வடிகால் பணிகள் ஒருங்கிணைந்து நடைபெற வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றார்.